Translate

Wednesday 23 October 2019

வீரப்பூர் - பொன்னர் சங்கர் - அண்ணமார் சாமி கதை


வீரப்பூர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது வீரப்பூர். வீரப்பூரில் பொன்னர் சங்கர் என்னும் உலக புகழ் வாய்ந்த அண்ணமார் சுவாமிகள் எனப்படும் பொன்னர் சங்கர் கோவில் உள்ளது.இந்த கதை நடந்த இடமான வீரப்பூரில் வருடந்தோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறும். இந்த விழா 7 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழா புகழ் வாய்ந்தது.இந்த விழாவிற்கு வரும் மக்கள் விழா நாளான 7 நாள்களும் அங்கேயே தங்கி இருப்பர். இந்த கோவில் அங்குள்ள பெரியக்காண்டியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ளது.அதற்கு அருகில் காவல் தெய்வமாய் பிரமாண்டமான உயரத்தில் மிரட்டும் விழிகளுடன் இருக்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை காளை மாட்டுடன் கூடிய சாம்புவன் சிலை உள்ளது. வீரப்பூர் அருகே வீரமலை என்னும் மலை உள்ளது. இந்த மலை மீது தவசு கம்பம் என்னும் ஒரு இடம் உள்ளது இந்த இடத்தில் தான் பெரியக்காண்டியம்மன் தவம் செய்ததாக கூறப்படுகிறது. வீரமலையின் ஒரு பகுதியில் கூவனாம்பள்ளம் என்ற ஒரு இடம் உள்ளது இந்த இடத்தில் தான் வீரப்போர் நடந்தது என்று கூறப்படுகிறது. அண்ணமார் சுவாமி கதையில் வரும் படுகளம் காட்டு கோவில் இங்கு தான் உள்ளது.

வரலாறு

முழு கதையை படிக்க இங்கே கிளிக் செய்யவும் (Ref:http://ponnivala.blogspot.com/2014/08/blog-post_38.html)

Manapparai - மணப்பாறை

மணப்பாறை, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி. இங்கு கிடைக்கும் முறுக்கும்,  நடக்கும் மாட்டுச்சந்தையும் உலக புகழ் வாய்ந்தது.

 "மணப்பாறை மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி..!"  - பழைய திரைப்படப் பாடல் கூட உண்டு.அந்த அளவுக்கு புகழ் வாய்ந்த ஊரு.


 மணப்பாறை - வீரப்பூர் பொன்னார் ஷங்கர் கோவில் அனைவரும் அறிந்த கோவில்.

ஜாதகம் பொருத்தம் அவசியமா? - மனதை சுட்ட உண்மைகள்

ஜாதகமா இல்லை பாதகமான்னு தெரியல . ஜாதகம் என்கிற பெயரில் எதனை பெண்ணின் வாழ்க்கையில் கல்யாணம் என்பது வெறும் கனவாக உள்ளது? ஜாதக பொருத்தம் பாத்து வைச்சு தான் கல்யாணம் பண்ணறீங்க ஆனா கல்யாணம் பன்னுனா கொஞ்ச நாள்ல விவாகரத்து கேட்டு கோர்ட்ல நிக்குறாங்க அப்பறம் எதுக்கு நாலு கட்டம் போட்டு வாழ்க்கையை வீணாக்குறாங்கன்னு தெரியல . ஏன் இதை யாரும் யோசிக்க மாட்டேங்குறான்ங்க தெரியல. ஜாதகத்தினால நாம சாதிக்க போறது என்ன?