ஆவாரம் பூ
ஆவாரம் பூ ஒரு மருந்து மலர், இதை ஒரு டாக்டர் என்று கூட சொல்லாம். அந்த அளவுக்கு மருத்துவ குணம் இதில் உண்டு. முன்பு கிராமத்தில் காட்டில் ஆவாரம்பூ பூத்துக் கிடக்கும். இந்த
பூ கிட்டத்தட்ட அழிந்து விட்டது.
ஆவாரம் பூ மருத்துவ பயன்கள் :
உடல் சூடு உள்ளவர்கள் ஆவாரம் பூ கஷாயம் குடித்தால் உடல் சூடு குறையும். ஆவாரம் பூவை காய வைத்து பொடி செய்து அந்த பொடியை நீருடன் கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தினால் உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண், வயிற்றுப்புண்,வெள்ளைப் படுத்தல் போன்றவை குணமாகும் , மேலும் இந்த பூ இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்ச தன்மை கொண்டது . உடலுக்கு சக்தி தரும், நாவறட்சி போக்கும்.
ஆவரம் பூவை பாசிப்பயறு உடன் சேர்த்து அரைத்து குளித்தால் உடம்பில் உள்ள துர்நாற்றம் நீங்கும் . உடம்பு நிறம் கொடுக்கும்.
ஆவாரம் பூவையும் அதன் கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் குறையும்.
ஆவாரம் பூவை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு போல் சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும்.
ஆவரம் பூவை பொடி செய்து, அதனுடன் அதே அளவு அருகம் புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணம் செய்து இரண்டு தூளையும் ஒன்றாய் கலந்து ஒரு சீசாவில் போட்டு வைக்கவும். தினமும் காலை, மாலை, அரைத்தேக்கரண்டியளவு பசு நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.
தலை முடி கொட்டாமல் இருக்க ஆவாரம் பூ , ரோஜா இதழ்,சீகைக்காய் இத மூன்றையும் சேர்த்து நன்றாக காய வைத்து பொடி செய்து ஷாம்பு க்கு பதில் இதை தலைக்கு தேய்த்து குளித்தால் முடி கொட்டாது.