Translate

Wednesday 17 August 2016

கற்றாழை - Alo- vera


கற்றாழை - Alo- vera

கற்றாழை கடவுள் தந்த பொக்கிஷம் . பல நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் கற்றாழையில் உள்ளது.கற்றாழை உடல் அழகிற்கு மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. 


 கற்றாழை வறண்ட பகுதியில் அதிகம் காணப்படும். இதில் சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை என பல வகை உண்டு.


கற்றாழை


இதை இங்கிலீஷில் அலோ-வேற என்று சொல்லுவார்கள்.


 கற்றாழையில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளது. அதில் இருக்கும் கொழகொழப்பான தன்மை ‘கிளைக்கோ புரோட்டின்’ என்ற ஒரு வகை புரதத்தால் உண்டாகிறது. இந்த புரதம் வலிகளையும், வீக்கத்தையும் நீக்கும் சக்தி வாய்ந்தது. 


 கற்றாழையில் உள்ள சர்க்கரை சத்துகள் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சருமத்தை மென்மையாக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களை உருவாக்கும். 

 கற்றாழை நாம் பயன்படுத்தும் அழகுசாதன பொருள்களிலும் , மருந்துகளிலும் உள்ளது. 


 கோடைக்காலத்தில் சருமத்தில் தோன்றும் வியர்க்குரு, அரிப்பு மற்றும் தேமல்களுக்கு கற்றாழை மருந்தாகிறது. அதில் இருக்கும் கொழகொழப்பான புரதப்பகுதியை எடுத்து, சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.


 தோலில் உண்டாகும் சோரியாஸிஸ் நோய்க்கு கற்றாழையின் தசைப் பகுதியை எடுத்து, தினமும் பூசி அரை மணி நேரம் வைத்திருக்கவேண்டும். கற்றாழையில் உள்ள நீர் சத்தை சருமம் வேகமாக உள்ளிழுத்துக் கொள்ளும். அதனால் சருமத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சருமம் மென்மையடையும்.


 கற்றாழை தசைப் பகுதியை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். முகசுருக்கம் நீங்கும். கரும்புள்ளிகள் அகலும். வெயிலில் செல்வதால் முகத்தில் உண்டாகும் நிறமாற்றங் களும் சீராகும்.


 தீக் காயங்களில் கற்றாழை தசைப் பகுதியை வைத்துகட்டினால் புண்கள் விரைவாக ஆறும். கற்றாழையில் உள்ள புரதம், சருமம் நார்திசுக்களை உற்பத்தி செய்யவும் துணைபுரியும். கற்றாழை மேல்தோலை நீக்கிவிட்டு, அதன் தசைப் பகுதியை எடுத்து தண்ணீரில் ஐந்து முறை நன்கு கழுவி 30 கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வரவேண்டும். சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். மலச்சிக்கல் தீரும். 


மூலநோய்கள் மற்றும் மூலத்தில் உள்ள சூடு கட்டுப்படும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளில் நிவாரணம் கிடைக்கும். வயிற்றுப் புண் கட்டுப்படும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவும், கெட்ட கொழுப்பின் அளவும் குறையும். மலச்சிக்கல் உள்ளவர்கள் கற்றாழை சோற்றை 50 கிராம் அளவு சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.


 கோடைக்காலத்தில் வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால் கண் வீக்கம், கண்சிவப்பு, கண்எரிச்சல் போன்றவை ஏற்படும். இதற்கு கற்றாழையின் தசைப் பகுதியில் படிகார தூள் தூவி, கண்களை மூடிக்கொண்டு கண்களில் வைத்துக் கட்டவேண்டும். வலி, வீக்கம், எரிச்சல் நீங்கும். கற்றாழை கூந்தல் தைலம் தயாரிப்பதற்கும், உடல் அழகுக்கு பயன்படுத்தும் பல்வேறு கிரீம் வகைகள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.  



கற்றாழை தேங்காய் எண்ணெய் : 


உங்களுக்கு தலை முடி கொட்டுகிறதா ? முடி உதிர்கிறதா ? தலையில் பூச்சி வெட்டு உள்ளதா? கவலை வேண்டாம்,


 எங்களிடம் மூலிகை தேங்காய் எண்ணெய் உள்ளது . இதை தினமும் தலையில் தேய்த்தால் முடி உதிராது , தலையில் பூச்சி வெட்டு வராது. 




 இதில் எந்த வித கெமிக்கல் இல்லை . இதில் கற்றாழை, வெந்தயம்  கலந்து உள்ளது . இயற்கையான முறையில் செய்தது , இது ஒரு homemade product ஆகும்.

Contact: P.saravanan (haarish.saravanan@gmail.com)


 கற்றாழையை இதய நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் பயன்படுத்த கூடாது. தீக் காயங்களுக்கு சிறந்த முதல் உதவி மருந்து, கற்றாழை. இதனை மிக எளிதாக வீடுகளில் சிறு தொட்டிகளில் வளர்க்கலாம். கற்றாழையை மருந்தாக மட்டுமின்றி, உணவாகவும் சாப்பிடலாம்.


 கூட்டு


 கற்றாழை – 2 மடல் 

 பெ. வெங்காயம் – 1 (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)

 தக்காளி – 1 

 இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி 

 மிளகாய் – 2 

 மிளகு பொடி – ½ தேக்கரண்டி

 தனியா பொடி – 1 தேக்கரண்டி

 மஞ்சள் பொடி – ½ தேக்கரண்டி 

 உப்பு – தேவைக்கு 


 வறுத்து அரைக்க: 


 சீரகம் – 1 தேக்கரண்டி

 பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி 

 கசகசா – 1 தேக்கரண்டி

 மிளகு – ½ தேக்கரண்டி

 கிராம்பு – 3

 ஏலக்காய் – 3

 பட்டை – சிறுதுண்டு

 வேர்கடலை பருப்பு – 2 தேக்கரண்டி

 தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி

 காய்ந்த மிளகாய் – 2 


 தாளிக்க: 


கடுகு – 1 தேக்கரண்டி

 உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி 

 நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி 


 செய்முறை: 


கற்றாழையை தோல் சீவி அதன் தசைப் பகுதியை எடுத்து நீரில் கழுவி, வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் அரைப்பதற்கான பொருட்களை இட்டு லேசாக வறுத்து பொடி செய்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிவைத்திருக்கும் வெங்காயத்தை கொட்டுங்கள். தக்காளி, மிளகாய் போன்றவைகளை நறுக்கிப்போட்டு தாளியுங்கள்.

 

மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி போன்றவைகளை கொட்டி நன்றாக கிளறுங்கள். அதில் வேக வைத்துள்ள கற்றாழை துண்டுகள், அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்கள், உப்பு போன்றவைகளை சேருங்கள். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். இதை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் இது பிரபலமான உணவாகும்.


 ஜாம்


 கற்றாழை தசைப் பகுதி துண்டுகள் – 250 கிராம்

 சர்க்கரை – 200 கிராம்

 சாரைப் பருப்பு – 10 கிராம் 

 வெள்ளரி விதை – 10 கிராம் 

 பாதாம் பருப்பு – 10 கிராம் 

 பிஸ்தா பருப்பு – 10 கிராம்

 நீர்முள்ளி விதை – 10 கிராம்

 சலாமிசிறி – 10 கிராம் 

 ஜாதிக்காய் – 5 

 நெய் – 50 மி.லி 


 செய்முறை:


கற்றாழை துண்டுகளை மிக்சியில் இட்டு ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் சர்க்கரையை கொட்டி சிறிது நீர் சேர்த்து பாகு ஆக்கவும். பதத்திற்கு வந்ததும் அரைத்து வைத்துள்ள கற்றாழையை சேர்த்து கிளறவும். பின்பு பொடித்து வைத்துள்ள பருப்பு வகைகளை கலந்து கிளறி, நெய் சேர்க்கவும். 


நன்றாக கிளறிவிட்டு, பாத்திரத்தில் ஒட்டாத நிலைக்கு வரும்போது அடுப்பை அணைத்து விடவும். ஆறிய பின்பு இதனை கண்ணாடி பாட்டில்களில் அடைத்துவைத்து பயன்படுத்தவும். இதை காலை, இரவு 1 தேக்கரண்டி வீதம் இளம் பெண்கள் உண்டு வந்தால், மாதவிடாய் தொடர்புடைய கோளாறுகள் நீங்கும். கருப்பை கோளாறு உடையவர்களும், குழந்தைப் பேறு இல்லாதவர்களும் இதை சாப்பிட்டுவரலாம்.


 (குறிப்பு: நீர் முள்ளிவிதை மற்றும் சலாமிசிறி போன்றவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) 


 தைலம்


கற்றாழை தசை – 300 கிராம் 

 விளக்கெண்ணெய் – 300 மி.லி

 வெந்தயம் – 50 கிராம்

 சீரகம் – 50 கிராம்

 சிறிய வெங்காயம் – 100 கிராம் 

 பனங்கற்கண்டு – 200 கிராம்


 செய்முறை: 


கற்றாழையை துண்டுகளாக்கி, சிறிய வெங்காயத்துடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெந்தயம் மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் விளக்கெண்ணெய்யை ஊற்றி சற்று சூடானதும் அரைத்த கற்றாழை கலவையையும், பொடி வகைகளையும் சேர்த்து மிதமாக அடுப்பை எரியவைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவேண்டும். 


நன்கு வெந்து வரும்போது பனங்கற்கண்டை கலந்து கிளறவேண்டும். ஆறிய பின்பு பாட்டிலில் அடைத்துவைத்துக்கொள்ளவும். இதை 10 கிராம் (2 தேக்கரண்டி) வீதம் காலை, மாலை உணவிற்கு பின்பு சாப்பிட்டு வரலாம். மூலநோய், மூலநோய் எரிச்சல், ஆசன வெடிப்பு, வயிற்று வலி, மலகட்டு, குடல் பூச்சிகளால் ஏற்படும் வயிற்று வலி போன்றவை நீங்கும். மலச்சிக்கல் இல்லாதவர்கள் இரவு ஒரு வேளை உண்டால் போதும்.


 சாறு:


 கற்றாழை மடல் – 1 

 தண்ணீர் – 1 லிட்டர் 

 எலுமிச்சைசாறு – 1 தேக்கரண்டி 

 சர்க்கரை – தேவைக்கு 


 செய்முறை: 


 கற்றாழை தசைப் பகுதியை எடுத்து நன்றாக கழுவி, மிக்சியில் அரைத்து அதில் சர்க்கரையை சேருங்கள். சுவைக்கு தக்கபடி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இந்த சாறு 100 மி.லி. வரை அருந்தலாம். வயிற்று புண், வாய்புண், சரும நோய் மற்றும் மாதவிடாய் கோளாறுகளை இது சரி செய்யும்.




Reference Source: Dailythanthi


No comments:

Post a Comment